Wednesday 30 January 2019

கடிக்கும் குளிர்


Ramasami Elanthai

இன்று சிக்காகோவில் இதுவரை கண்டிராத அளவு குளிர் குறைந்து இருக்கிறது. -59 டிகிரி பாரன்ஹீட். இதைவிட மிகவும் மோசமாக -70 எல்லாம் அலாஸ்காவில் சைபீரியாவில், அண்டார்ட்டிக்காவில் உண்டென்றாலும் இன்றைய நிலையில் சிக்காக்கோ குளிரைவிட அங்கெல்லாம் அதிகமில்லை. இன்று சிக்காகோ உலக அளவில் வெப்ப நிலை குறைந்து காணப்படுகிறது. இரயில்வே தண்டவாளங்களை அங்கங்கே தீமூட்டிச் சூடுபடுத்தித்தான் இரயிலைச் செலுத்துகிறார்கள். அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை. கொதிக்கிற ஆவி பறக்கும் வெந்நீரை வெளியில் நின்று கொண்டு மேல் நோக்கி ஊற்றினால் அது உறைந்துவிடுகிறது. (frosty). இதை நானே செய்து பார்த்தேன். இந்தக் குளிரில் தகுந்த பாதுகாப்பின்றி வெளியில் ஐந்து நிமிடம் நின்றால் போதும். உடல்முழுதும் பனிக்கடிக்கு ஆளாகி (frost bite) கீழே விழுந்துவிடுவான் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். எவரும் வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
என்றுமில்லாக் குளிர்
இற்றைப் போதில் உலகில் எங்கும்
இலாத குளிரைச் சிக்காகோ
பெற்று நடுக்க வைக்கும் நிலையில்
பெரிதாய்க் கொதிக்கும் வெந்நீரை
சற்றே மேலே தூக்கி ஊற்றச்
சட்டென்றுடனே பனியாகும்
உற்றுப் பாரென் றுரைத்தார் அதனை
உடனே நானே சோதித்தேன்

No comments:

Post a Comment